பங்குச்சந்தையில் சரிவு: இந்திய முதலீட்டாளர்களுக்கு... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பங்குச்சந்தையில் சரிவு: இந்திய முதலீட்டாளர்களுக்கு ரூ.9.5 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள வரிகள் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.
பரஸ்பர வரிவிதிப்பால், இரண்டாவது நாளாக அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. DOW JONES பங்குச்சந்தையில் 2,000 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்தனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் விதித்த வரி காரணமாக ஆட்டோமொபைல் துறை தொடங்கி ஐ.டி. துறை வரை எல்லாம் மொத்தமாக வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-04-05 03:24 GMT