பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மியான்மர் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,354 ஆக உயர்வடைந்து உள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது.
ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 184 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.
துடிப்பான கிராமங்களுக்கான திட்டம்-2 என்ற 2-வது கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.6,839 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
2028-29 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டம், அருணாசல பிரதேசம், அசாம், பீகார், குஜராத், மணிப்பூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட கிராமங்களில் அமல்படுத்தப்படும்.
இந்த 2-ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்தே முழு அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 100 சதவீதம் மத்திய அரசு திட்டம் என்ற அளவில் அது செயல்படுத்தப்படும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
ரூ.18,658 கோடி மதிப்பிலான மத்திய ரெயில்வே அமைச்சகத்தின் 4 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. புதிய ரெயில்வே திட்டங்கள் இணைப்புக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இலங்கையின் கொழும்பு நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்தியில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுடன் சுமுகமான சந்திப்பு நடைபெற்றது. இச்சமூகத்தினர் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்குமான ஒரு வாழும் உறவு பாலமாக திகழ்கின்றனர். இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்புடன் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித சீதை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணம் மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ஆதரவு வழங்கும் என தெரிவித்து உள்ளார்.
சென்னை அணி 11 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை எடுத்து திணறி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவீந்திரா (3), கான்வே (13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ருதுராஜ் (5), சிவம் துபே (18) மற்றும் ரவீந்திர ஜடேஜா (2) ரன்களில் வெளியேறினர். தோனியும், விஜய் சங்கரும் விளையாடி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, இன்று முதல் 9-ந்தேதி வரையிலான 5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாஷ்கண்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சமூக மேம்பாடு மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நடவடிக்கை என்ற தலைப்பிலான பொது விவாதத்தில் பங்கேற்று ஓம் பிர்லா உரையாற்றுவார்.
இதேபோன்று நிகழ்ச்சியில் பங்கு பெறும் பிற நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்களையும் சந்தித்து அவர் பேசுவார். இந்திய சமூக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார் என மக்களவை செயலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
டெல்லியில், ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லி அரசும், தேசிய சுகாதார கழகமும் கையெழுத்திட்டு உள்ளன.
முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையின் கீழ் பா.ஜ.க.வின் டெல்லி அரசு மேற்கொண்டு வரும் பணியால் எங்களுடைய எம்.பி.க்கள் அனைவரும் பெருமை கொள்கிறார்கள் என அக்கட்சியை சேர்ந்த எம்.பி. மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்துள்ளது. அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்க உள்ளது.