கவனமா இருங்க.. பரவும் மெட்ராஸ் ஐ - அறிகுறிகள்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

கவனமா இருங்க.. பரவும் மெட்ராஸ் ஐ - அறிகுறிகள் என்னென்ன..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை வழக்கத்தை விட 20 சதவீதம் 'மெட்ராஸ் ஐ' பாதிப்பு அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்விழி, இமை ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்தப் பாதிப்பைத் தொடக்கத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

கண்விழி சிவந்து இருத்தல், தொடர்ந்து நீர் வடிதல், கண்களில் எரிச்சல், தெளிவற்ற பார்வை போன்றவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும்.

தெளிவில்லாத பார்வை இருந்தால் தாமதிக்காமல் டாக்டரை நாடுவது நல்லது.

Update: 2025-04-05 03:35 GMT

Linked news