சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23-ந் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில் தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்திருந்த மனு மீது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன் முடிவில், விசாரணை ஏப்ரல் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-05 10:45 GMT