நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில்... ... பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று, இன்று முதல் 9-ந்தேதி வரையிலான 5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தாஷ்கண்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

சமூக மேம்பாடு மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நடவடிக்கை என்ற தலைப்பிலான பொது விவாதத்தில் பங்கேற்று ஓம் பிர்லா உரையாற்றுவார்.

இதேபோன்று நிகழ்ச்சியில் பங்கு பெறும் பிற நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்களையும் சந்தித்து அவர் பேசுவார். இந்திய சமூக உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களையும் சந்தித்து அவர் பேசவுள்ளார் என மக்களவை செயலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

Update: 2025-04-05 12:48 GMT

Linked news