செகந்திராபாத்: எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
செகந்திராபாத்: எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
செகந்திராபாத் பட்னி நகரில் எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தின் 4வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஆவணங்கள், கணினிகள், தளவாட பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்
Update: 2025-05-05 03:53 GMT