இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
"யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்க" - தமிழக காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
"சிகிச்சை, படப்பிடிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும்" - டிடிஎஃப் வாசன்
"டிடிஎஃப் வாசன் மீது தமிழகத்தில் அதிவேகமாக பைக் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகள் உள்ளது" - காவல்துறை
தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனு
"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு"
"பஹல்காம் தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலி"
"கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்"
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடிய ரஷ்ய அதிபர் புதின்
வக்பு அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்படுள்ள தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்று என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், நேரமின்மை காரணமாக வக்பு தொடர்புடைய வழக்குகளை மே 15 ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
"உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் நடந்த சம்பவம் தொடர்பான காவல் துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம்
விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம்
சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காலை 09.42 மணிக்கு,
100க்கு கால் செய்து தகவல் தெரிவித்தோம்
முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்"
- மதுரை ஆதீனம்
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும். திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இன்று 05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு 7-ம் தேதி முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7ம் தேதி) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிய உத்தரவு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்காக வழக்கை ஜூன் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
'தமிழ் வார விழாவின்' நிறைவு விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தமிழ் வார விழாவின் நிறைவு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர்.
இதன்படி கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே. ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.