ஆனைமலை மலையேற்றம் - கேரளாவை சேர்ந்த டாக்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

ஆனைமலை மலையேற்றம் - கேரளாவை சேர்ந்த டாக்டர் உயிரிழப்பு

பொள்ளாச்சி அருகே ஆனைமலை டாப்ஸ்லிப் மலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த டாக்டர் அஜ்சல் சைன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அஞ்சல் சைன் (26) மற்றும் பாகில் தயூப் ராஜ் (27) ஆகிய இருவர் டிரக்கிங் தமிழ்நாடு திட்டத்தில் பதிவு செய்து முறையான அனுமதி பெற்று மலையேறினர்.

8 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங் சென்று திரும்பிய நிலையில், அஞ்சல் சைனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

Update: 2025-05-05 05:31 GMT

Linked news