பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-05-2025

பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்


சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது கூடுதல் ஜாமீன் நிபந்தனைகளை விதிக்க கோரும் சிபிஐ-யின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

மேலும் சிலை கடத்தல் வழக்கில் ஜாமீன் பெற்ற பொன்.மாணிக்கவேல், தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் உள்ளதால் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


Update: 2025-05-05 06:16 GMT

Linked news