ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
ஓசூரில் கனமழை: அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
தொடர் கனமழையால் ஓசூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த மருத்துவமனையில் ஒருபகுதி சுவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சாலைப்பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த நிலையில், 2 நாட்களாக கிருஷ்ணகிரியின் ஓசூர் பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் சுற்றுச்சுவரின் மீதி எஞ்சிய பகுதியும் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-10-05 04:43 GMT