இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு
காலாண்டுத் தேர்வு தொடர் விடுமுறையானது இன்றுடன் நிறைவடைகிறது. நாளை (அக்டோபர் 6-ம் தேதி) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும்.
உத்தரப்பிரதேசத்தில் நவராத்திரியின் முதல் நாளில் தொடங்கப்பட்ட மிஷன் சக்தி 5.0 நடவடிக்கையின் கீழ் 3,900 பேர் கைது செய்யப்பட்டனர். 2,500 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக யாருடன் கூட்டணி சேர்ந்தால் டிடிவி தினகரனுக்கு என்ன? டிடிவி தினகரன் தனது இருப்பை காட்டி கொள்ள எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூறியுள்ளார். பாஜக கூட்டணியை விட்டு அமமுக விலகிய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வரி, இருதரப்பு வர்த்தகம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷியாவுடனான எரிசக்தி ஒப்பந்தத்தை குறிப்பிட்டு வரி உயர்த்தியது நியாயமற்றது என அமெரிக்காவிடம் பகிரங்கமாக எடுத்துரைத்துள்ளோம் என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நாகை - காங்கேசன்துறை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தின் 7 நாட்களும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து: சிறு வயதில் தத்துக்கொடுத்த மகளை 50 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை கண்டுபிடித்துள்ளார். மனைவி உயிரிழந்ததால் மகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கெவின் ஜோர்டர். தனியார் தொலைக்காட்சியின் உதவியால் மகளை கண்டுபிடித்து இருவரும் சந்தித்துள்ளனர்.
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஏரியில் நீச்சல் தெரியாமல் குளித்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். யுவராஜ் (14), திசாந்த் (8) இருவரின் சலங்களையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
டார்ஜிலிங் நிலச்சரிவு பாதிப்பு நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடிகூறியுள்ளார்.
குளித்தலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்களை வைத்து நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.