திருப்பரங்குன்றம் வழக்கு: மதுரை கலெக்டர், மாநகர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
திருப்பரங்குன்றம் வழக்கு: மதுரை கலெக்டர், மாநகர காவல் ஆணையர் இன்று ஆஜர்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர் மற்றும் மாநகர காவல் ஆணையர் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக உள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது;
மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும் அதனை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரபட்டிருந்தது. இதனிடையே வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
Update: 2025-12-05 04:05 GMT