திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் பேச... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கக் கோரி திமுக கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
Update: 2025-12-05 06:19 GMT