4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.
பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. இதன்படி பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக வந்து திறந்து வைக்கிறார்.
இதனைத்தொடர்ந்து ரூ.7,750 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
இதன்படி வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சை ஆகிய பகுதிகளில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.