கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்தில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
கோவை சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்தில் உள்ள தனியார் டயர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து சேதமடைந்தன.
இதனால், கரும் புகை எழுந்து வான்வரை பரவியது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சூலூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-04-06 13:18 GMT