நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு நியமித்த விசாரணைக்குழு அறிக்கை வழங்கியது

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் 3 ஐகோர்ட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்தார். இந்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்தது. இந்த அறிக்கை நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எடுக்கப்பட்ட பணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் விசாரணைக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Update: 2025-05-06 04:55 GMT

Linked news