13-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025
13-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 13-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால், இந்தாண்டு மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரியளவில் இருக்காது என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-06 08:22 GMT