உக்ரைனின் 6 பிராந்தியங்களில் ரஷியா அதிரடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-06-2025

உக்ரைனின் 6 பிராந்தியங்களில் ரஷியா அதிரடி தாக்குதல்

உக்ரைனின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ரஷியா நேற்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைனின் 6 பிராந்தியங்களை குறிவைத்து நடத்திய வான் தாக்குதலில் உக்ரைனுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் 407 டிரோன்கள் மற்றும் 44 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னத் தெரிவித்தார். சுமார் 30 ஏவுகணைகளையும் 200 டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2025-06-06 12:39 GMT

Linked news