ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகள்:... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025

ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகள்: முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதன் வெள்ளோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேருக்கு நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 

Update: 2025-12-06 04:53 GMT

Linked news