டெல்லியில் பாஜக தலைவர்களுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை
டெல்லியில் பாஜக தலைவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனையில் ஈடுபட்டார்.
திருச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த நிலையில் நேற்று (ஜன.6) எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டணி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2026-01-07 06:19 GMT