இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2026-01-07 09:09 IST


Live Updates
2026-01-07 08:21 GMT

திருப்பூரில் பழமையான முருகன் கோவில் இடிப்பு: அண்ணாமலை கண்டனம் 


யாரை திருப்திப்படுத்த இது போன்ற இந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக அரசு என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

2026-01-07 08:12 GMT

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம் தகவல் 


ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தமிழக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2026-01-07 08:10 GMT

திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 8 புதிய அறிவிப்புகள்...என்னென்ன? 


திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

2026-01-07 08:09 GMT

திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பாஜக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் 


நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்