புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
மதுரையில் இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், 'தமிழகம் வளர்கிறது' எனும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், 36,660.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. மேலுாரில், 'சிப்காட்' தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடக்கும் விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை, முதல்வர் வழங்குகிறார்.
Update: 2025-12-07 05:34 GMT