டெல்லியில் அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
டெல்லியில் அமித் ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில் அனைத்துகட்சி கூட்டம் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தொடங்கி உள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
Update: 2025-05-08 05:44 GMT