இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 'ஆபரேஷன் பிம்பிள்' நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-11-08 04:46 GMT