சட்டசபை தேர்தல்; கிருஷ்ணகிரி தி.மு.க.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
சட்டசபை தேர்தல்; கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்படி, கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு தி.மு.க.வினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.