எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக குழு சென்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையேயான தொகுதிப்பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முன்னதாக அதிமுகவிடம் 56 தொகுதிகளை கேட்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2026-01-09 04:16 GMT