ஜனநாயகனுக்கு விழுந்த முட்டுக்கட்டை.. தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
ஜனநாயகனுக்கு விழுந்த முட்டுக்கட்டை.. தொடர்ந்து இழுபறியில் பராசக்தி
ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா இன்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது என்றும், இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது என்றும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஜனநாயகனைத் தொடர்ந்து நாளை (ஜன.10) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட பராசக்தி திரைப்படத்திற்கும் தணிக்கை சான்று இதுவரை கிடைக்காததால் சிக்கல் நீடித்து வருகிறது.