ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் மர்ம மரணம்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் மர்ம மரணம்: பயங்கரவாத செயலா?
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் மல்ஹார் அருகே கடந்த 5-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் அவர்களை காணவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களின் உடல்கள், ஊரைவிட்டு வெகு தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. உடல்களில் எந்த காயங்களும் இல்லை. எனினும், இதன் பின்னணியில் பயங்கரவாத செயல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2025-03-09 08:24 GMT