இந்து கோவில் மீது தாக்குதல்- காங்கிரஸ் கண்டனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

இந்து கோவில் மீது தாக்குதல்- காங்கிரஸ் கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சினோ ஹில்ஸ் பகுதியில் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி இழிவுபடுத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின்மை செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், எந்த நாகரிக சமூகத்திலும் அவர்களுக்கு இடமில்லை என்றும் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா கூறி உள்ளார்.

Update: 2025-03-09 11:59 GMT

Linked news