செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர் என நீதிபதி கேட்டதற்கு, அதுபற்றிய தரவுகளை தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

குற்றப்பத்திரிகை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட கோர்ட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது. ஏப்ரல் 20-ந்தேதி ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2025-04-09 11:21 GMT

Linked news