புதுச்சேரி முழுவதும் அரசு பஸ் ஒப்பந்த ஊழியர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
புதுச்சேரி முழுவதும் அரசு பஸ் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலம் முழுவதும் 80% அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணி நிரந்தரம் கோரி 265 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதில் பயணிகள் அவதியடைந்தனர்.
காரைக்காலில் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம். அதனால், பணி நிரந்தரம் செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
Update: 2025-04-09 14:48 GMT