இஸ்ரேலுக்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-06-2025
இஸ்ரேலுக்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் சமூக ஆர்வலர்கள் காசாவில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக நிவாரணப் பொருட்களுடன் கப்பலில் சென்றனர். இஸ்ரேல் கடற்பகுதிக்குள் கப்பல் நுழைந்தபோது, இஸ்ரேல் படையினர் இடைமறித்து, அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரும் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.
Update: 2025-06-09 12:07 GMT