எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்;... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025

எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்; மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல் 


எஸ்.ஐ.ஆர் குறித்து பேசாமல் விவாதத்தை ராகுல் காந்தி திசை திரும்புவதாக மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜு குற்றம்சாட்டினார். தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசுமாறு ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, எஸ்.ஐ.ஆர் குறித்துதான் பேச வருகிறேன். அதற்குள் குறுக்கிடாதீர்கள்.எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.பாஜக அரசு எல்லாவற்றையும் பேச மட்டுமே செய்கிறது. ஆனால் செயலில் ஒன்றுமில்லை. நான் சொல்லக் கூடியது கசப்பான உண்மைகள்; எதிரணியில் இருக்கும் ஆளுங்கட்சியினரால் நிச்சயமாக ஏற்க முடியாது என்றார்.

Update: 2025-12-09 11:43 GMT

Linked news