இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
2025-12-09 05:09 GMT
யாரிடம் பிளவு உள்ளது? திமுக எம்பி ஆ.ராசா கேள்வி
- பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும். வந்தே மாதரம் பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள். பிளவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது-மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் சிறப்பு விவாதத்தில் எம்.பி. ஆ.ராசா பேச்சு
2025-12-09 04:50 GMT
திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் திமுக வழங்கவுள்ளது. இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் தி.மு.க சார்பில் வழங்கப்படவுள்ளது