சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-04-10 10:40 GMT