இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-10 09:03 IST


Live Updates
2025-04-10 14:04 GMT

சேலத்தில் வரும் 19-ல் நடைபெறவிருந்த பாஜக பெருங்கோட்ட மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் தேர்தல், போலீஸ் அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். பாஜக பெருங்கோட்ட மாநாடு வரும் 19-ல் சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

2025-04-10 13:35 GMT

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள். மாநில நிர்வாகிகள் திலகபாமா, அன்பழகன், பாலு உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களை ராமதாஸ் இன்னும் சந்திக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

2025-04-10 12:56 GMT

சேலம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

2025-04-10 12:56 GMT

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். உள்துறை மந்திரி அமித்ஷா நாளை குருமூர்த்தியை சந்திக்க உள்ள நிலையில், அவருடன் அண்ணாமலை 1 மணி நேரம் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

2025-04-10 12:56 GMT

இன்று (ஏப்.10) இரவு சென்னை வரும் மத்திய மந்திரி அமித்ஷாவை தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் வரவேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-04-10 12:35 GMT

சென்னை அணிக்கு தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி. நடப்பு தொடரில் இருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-04-10 12:25 GMT

மொனாக்கோவில், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) - ஆர்தர் பில்ஸ் (பிரெஞ்சு) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆர்தர் பில்ஸ் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

2025-04-10 12:23 GMT

இந்தியாவிலேயே அன்னிய மரங்களை அகற்றும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.

2025-04-10 11:47 GMT

பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் இசாகார் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனந்த்பூர் கிராமத்தில் உள்ள ஆனந்த்பூர் தம் பகுதிக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். இதன்பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் இசாகார் பகுதிக்கு உட்பட்ட குருஜி மகாராஜ் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்வார். பொது கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறார்.

இந்த ஆண்டில் மத்திய பிரதேசத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஷ்வர் தம் பகுதிக்கு வருகை தந்த அவர், அடுத்த நாள் தலைநகர் போபாலில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

2025-04-10 11:32 GMT

டெல்லி செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதுபற்றி நடந்த சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்