பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் அசோக் நகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் இசாகார் தாலுகாவுக்கு உட்பட்ட ஆனந்த்பூர் கிராமத்தில் உள்ள ஆனந்த்பூர் தம் பகுதிக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். இதன்பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் இசாகார் பகுதிக்கு உட்பட்ட குருஜி மகாராஜ் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு பூஜைகள் செய்வார். பொது கூட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறார்.
இந்த ஆண்டில் மத்திய பிரதேசத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சத்தர்பூர் மாவட்டத்தில் பாகேஷ்வர் தம் பகுதிக்கு வருகை தந்த அவர், அடுத்த நாள் தலைநகர் போபாலில் நடந்த உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
Update: 2025-04-10 11:47 GMT