காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்
காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும்.
இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-10-10 05:04 GMT