இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-10 09:39 IST


Live Updates
2025-10-10 14:30 GMT

டெல்லி வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முத்தகியிடம் இந்தியா வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆம்புலன்ஸ்களை ஒப்படைத்தார்.

2025-10-10 14:28 GMT

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் அக்.17ஆம் தேதி கரூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-10-10 13:49 GMT

நெல்லை இளைஞர் கவின் ஆணவக்கொலை விவகாரத்தில் சுர்ஜித்தின் தந்தை சரவணனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2025-10-10 13:46 GMT

சென்னை ஐகோர்ட்டு அருகே தனது காரை வழிமறித்து இடையூறு ஏற்படுத்தியதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது "தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்ட சதி" என்றும் கூறியுள்ளார்.

2025-10-10 13:33 GMT

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040ம் ஆண்டு சதயவிழா, வரும் 31ம் தேதி காலை தொடங்கி 1ம் தேதி இரவு வரை இசை நிகழ்ச்சிகள், நடனம், கவியரங்கம், பட்டிமன்றத்துடன் கூடிய அரசு விழா விமரிசையாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். 

2025-10-10 13:25 GMT

`பிறர் எனக்காக என் வாழ்க்கையைத் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் தேனிலவையும் திட்டமிடுவதற்காக காத்திருக்கிறேன் என த்ரிஷா கூறியுள்ளார்.

2025-10-10 13:24 GMT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 318 ரன்கள் குவித்துள்ளது.

2025-10-10 12:58 GMT

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மதுரை அண்ணா நகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச்சென்றபோது தப்ப முயன்ற தினேஷ்குமார் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக காவல்துறை கூறும் நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது மதுரை ஐகோர்ட்டு

2025-10-10 12:24 GMT

மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

2025-10-10 12:23 GMT

இங்கிலாந்து: காதலி பலமுறை நினைவூட்டியும் லாட்டரி சந்தாவை ரத்து செய்ய மறந்துபோன ஜேம்ஸ் ஆடம்ஸ் என்பவருக்கு ரூ.1.28 கோடி பரிசுத்தொகை அடித்ததால் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

தனது சோம்பேறித்தனத்தால் இது கிடைத்ததாக தெரிவித்துள்ள ஜேம்ஸ், இந்த பணத்தின் மூலம் நியூசிலாந்துக்கு தேனிலவு செல்ல உள்ளதாகவம், புதிய குளியலறையை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்