திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025
திருநெல்வேலியில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி
திருநெல்வேலி அருகே திடியூரில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி வெள்ளநீர் கால்வாயை ஆக்கிரமித்து நீர் எடுத்து சுத்திகரிக்காமல் பயன்படுத்தியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விலங்கு, எலிகளின் ரத்தம், சிறுநீர் போன்றவைகள் தண்ணீரில் கலந்து இருப்பதன் காரணமாக இந்த காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே மறு உத்தரவு வரும் வரை பொறியியல் கல்லூரியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-10 05:29 GMT