காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025

காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞர் வெட்டிப் படுகொலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன.

காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய பொம்மை முதல்வர்? காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

Update: 2025-11-10 12:24 GMT

Linked news