மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025

மூத்த தம்பதிகளுக்கு கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்பதியருக்கு திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும்." என அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்டையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில்கள் சார்பில் சிறப்பு செய்யும் திட்டத்தை இன்று (10.11.2025) தொடங்கி வைத்து, 200 மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்தார்.

Update: 2025-11-10 13:04 GMT

Linked news