டெல்லி செங்கோட்டை அருகே கார் தீப்பிடித்து,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
டெல்லி செங்கோட்டை அருகே கார் தீப்பிடித்து, வெடித்து சிதறிய சம்பவத்தில், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்து உள்ளன. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-11-10 14:47 GMT