ஈரோடு: கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025
ஈரோடு: கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி பலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). கல்லூரி மாணவர். காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுபர்ணிகா (வயது 19). இந்நிலையில், ஸ்கூட்டரில் அமர்ந்தபடி சதீஷ் மற்றும் சவுபர்ணிகா சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த லாரியின் மீது அவர்களுடைய வாகனம் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை இருவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-11-10 14:50 GMT