இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்பு... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்பு தலையிடுவது ஏன்? - ஓவைசி கேள்வி

இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-

பாகிஸ்தான் தனது மண்ணை, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்தும் வரை நிரந்தர அமைதி என்பதே கிடையாது. சண்டை நிறுத்தம் இருக்கிறதோ இல்லையோ, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை நாம் விடக்கூடாது

1972 சிம்லா ஒப்பந்தத்தில் இருந்து, இந்தியா - பாக். விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையிடுவதை நாம் எப்போதுமே விரும்பியது இல்லை. இப்போது ஏன் ஏற்க வேண்டும்?. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் இனி துணை போகாது என அமெரிக்கா உத்தரவாதம் கொடுக்கிறதா? என்று தெரிவித்துள்ளார்.

Update: 2025-05-11 03:34 GMT

Linked news