பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
பாகிஸ்தானில் பல விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது இந்தியா. சண்டையை நிறுத்த பாகிஸ்தான் அவசர கோரிக்கை விடுத்தது. பாக். அத்துமீறலுக்குப் பிறகு படைகளை வலுப்படுத்தினோம். எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல். பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான், ராணுவத்தின் மீது அல்ல என்று இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி கூறியுள்ளார்.
அரபிக்கடலில் இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருந்தது. ராணுவம், விமானப்படையோடு இணைந்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பை நடத்தினோம். தாக்குதல் நிறுத்தம் இருந்தாலும், இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என்று கடற்படை அதிகாரி ஏ.என்.பிரமோத் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம் பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாதிகளை மட்டுமே தாக்குவதை உறுதியாகக் கொண்டோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம்.
பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலாகவே இதை நாங்கள் தொடங்கினோம்.பாகிஸ்தான் ராணுவ தலைமை, தாக்குதல் நிறுத்ததிற்கு அமெரிக்காவிடம் முறையிட்டது. பாகிஸ்தான் ராணுவ இயக்குநர் நேற்று அழைத்து, தாக்குதல் நிறுத்தயோசனையை முன்வைத்தார். நாளை பகல் 12 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவ இயக்குநரோடு, பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். நமது தாக்குதல் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது
பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அதிகம் பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் இன்று தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று லெப்டினன்ட் ஜெனரல் ராஜுவ் காய் கூறியுள்ளார்.
ஏப் 22-ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும். ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டின் அறிக்கையை வெளியிட நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், டிரோம் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சித்தது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
"ஆபரேஷன் சிந்தூர்" - இந்திய முப்படைகள் தரப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.
தாக்குதல் நிறுத்தத்தை மீறி இன்றும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கலாம் என இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு (தலைமை தளபதி உபேந்திர திவேதி உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ, பொதுமக்கள் முன் இன்று தோன்றி உரையாற்றினார். அப்போது அவர், உக்ரைன் மற்றும் காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்குவதற்காக வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
சென்னை புறநகரில் மழை
சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதன்படி ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.