உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிரம்மோஸ் விமான... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிரம்மோஸ் விமான தளம் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனை மையத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை காணொலி காட்சி வழியே திறந்து வைத்த மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, இன்று தேசிய தொழில்நுட்ப தினம் ஆகும்.

1998-ம் ஆண்டு இதே நாளில், அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின் கீழ் நம்முடைய விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுஆயுத பரிசோதனையை நடத்தினார்கள். இதில், இந்தியாவின் பலம் உலகிற்கு எடுத்து காட்டப்பட்டது.

நம்முடைய விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பலருடைய ஆழ்ந்த முயற்சிகளின் விளைவால் அந்த பரிசோதனை நடத்தப்பட்டது என கூறியுள்ளார்.

Update: 2025-05-11 09:27 GMT

Linked news