கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போப் லியோ, பொதுமக்கள் முன் இன்று தோன்றி உரையாற்றினார். அப்போது அவர், உக்ரைன் மற்றும் காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்குவதற்காக வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
Update: 2025-05-11 11:22 GMT