காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் மரணம் ஜம்மு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
காஷ்மீரில் இரண்டு ராணுவ வீரர்கள் மரணம்
ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் மலைத்தொடரில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது இரண்டு ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.
தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் லான்ஸ் ஹவில்தார் பாலாஷ் கோஷ், லான்ஸ் நாயக் சுஜய் கோஷ் ஆகிய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், “கடுமையான வானிலையில், துணிச்சலாக போராடிய வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் வணங்குகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-11 05:54 GMT