இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-10-11 09:52 IST


Live Updates
2025-10-11 11:20 GMT

பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி (வயது 62). மேலும் இதே ஊரை சேர்ந்த கந்தசாமி மனைவி செல்லம்மாள் (வயது 55). இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பெரியசாமி மற்றும் பக்கத்து நிலத்து உரிமையாளர் செல்லம்மாள் இருவரும் தங்களது நிலத்தில் விளையும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

2025-10-11 11:18 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கப்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமானது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

2025-10-11 11:16 GMT

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று காலை ரூ.680 உயர்ந்த நிலையில் மாலை ரூ.600 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2025-10-11 10:03 GMT

திருமண தேவைக்காக உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம், பணத்தை திருடிய நபர் கைது

கர்நாடகாவில் காதலியை திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்பட்டதால் உறவினரின் வீட்டில் ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிய 22 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

2025-10-11 10:02 GMT

சமூகநீதியை படுகொலை செய்யும் திமுக அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? - அன்புமணி ராமதாஸ்

சட்டம் போட்டு சாதியை ஒழிப்பதாக நாடகங்களை நடத்த வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்